உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியா
உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு இந்தியாதான் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8.4% ஆக வளர்ச்சியடைந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சி குறித்த இந்தத் தகவல் மோடியின் அரசுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக
ஜப்பான் மற்றும் ஜேர்மனியை பின்னுக்கு தள்ளிவிட்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை நாட்டின் உற்பத்தித் துறையின் விதிவிலக்கான வளர்ச்சி இந்தியப் பொருளாதாரத்துக்குப் பெரும் பலமாக இருந்திருக்கிறது என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.