கடைக்கு வெளியே கிடந்த பை: திறந்து பார்த்த பெண் செய்த செயல்
அமெரிக்கப் பெண்ணொருவருக்கு கடை ஒன்றின் முன் ஒரு பெரிய பை கிடைத்தது. பையைத் திறந்து பார்த்த அந்தப் பெண் அந்தப் பை நிறைய பணம் இருப்பதைக் கண்டார்.
கடைக்கு வெளியே கிடந்த பை
அமெரிக்காவிலுள்ள Greenville என்னுமிடத்தைச் சேர்ந்த Sonja O’Brien என்னும் பெண், தனது 15 வயது மகனுடன், பல்பொருள் அங்காடி ஒன்றிற்குச் சென்றுள்ளார்.
இரவு உணவுக்கான பொருட்களை வாங்கிவிட்டுத் திரும்பும்போது, வழியில் ஒரு பெரிய பை கிடப்பதைக் கண்டுள்ளார் Sonja. பையைத் திறந்து பார்த்தால், உள்ளே கட்டுக் கட்டாக அமெரிக்க டொலர்கள் இருந்துள்ளன.
பெண் செய்த செயல்
உடனே, அந்தப் பையை எடுத்துக்கொண்டு அந்த பல்பொருள் அங்காடிக்குள் சென்று, வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் விடயத்தைக் கூற, பையைத் திறந்து பார்த்த அந்த அதிகாரி மற்றும் ஊழியர்களும் திகைத்துப்போயிருக்கிறார்கள்.
உடனே அந்த அதிகாரி, Sonjaவின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு 20 டொலர் மதிப்புடைய கிஃப்ட் கார்டு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
ஆனால், Sonja அதை வாங்க மறுத்துள்ளார். என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வந்த மேலாளர், நடந்ததை அறிந்துகொண்டு, Sonjaவுக்கு 100 டொலர் மதிப்புடைய கிஃப்ட் கார்டு ஒன்றைக் கொடுத்து, நீங்கள் இதை வாங்கித்தான் ஆகவேண்டும். இரவு உணவுக்கு பொருட்கள் வாங்கத்தானே வந்தீர்கள், நல்ல உணவு சாப்பிடுங்கள் என்று கூறி வற்புறுத்தி அந்த கிஃப்ட் கார்டை அவருக்குக் கொடுத்துள்ளார்.
அது என் பணமல்ல, அதை நான் வைத்துகொள்ள முடியாது, நீங்கள் உழைத்து ஈட்டாத பணம் உங்களுடையதல்லவே என்கிறார் Sonja. நல்ல தாய், தன் தாய் செய்ததைக் கண்ட அந்த மகனும், வளர்ந்து வரும்போது நிச்சயமாக அந்த தாயைப் போல ஒரு நேர்மையான குடிமகனாக இருப்பான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.