இஸ்ரேலில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தெற்கு இஸ்ரேலில் லெபனான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வடக்கு இஸ்ரேல் மற்றும் தெற்கு இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இஸ்ரேல் அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும், இஸ்ரேலில் வசித்துவரும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
லெபனானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் தெற்கு பகுதியைச் சேர்ந்த கலிலீ மாகாணத்தில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. அப்பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த ஏவுகணைத் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த பாட்னிபின் மேக்ஸ்வெல் என்ற இளைஞர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.