217 முறை கொவிட் தடுப்பு ஊசி போட்ட நபர்!
ஜேர்மனியில் 62 வயதான நபர் ஒருவர் 217 முறை கோவிட் 19 தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் தனியார் மருத்துவமனைகளிலிருந்து கோவிட் 19 நோய்த்தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளார். கடந்த 29 மாதங்களாக இவர் இவ்வாறு 217 தடுப்பூசிகளை பெற்றுள்ளார்.
அந்த நபரிடம் மருத்துவ ஆய்வை மேற்கொண்ட எர்லாங்கன்-நூரம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கோவிட் 19 க்கு எதிராக அவர் 217 தடுப்பூசிகளைப் பெற்றிருந்தாலும், அவருக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை என கூறியுள்ளனர்.