உக்ரைன் உணவு தானியங்களுக்கு மீண்டும் வரிச்சலுகை அளித்த ஐரோப்பிய ஒன்றியம்
உக்ரேனிய உணவு உற்பத்தியாளர்களுக்கு மேலும் ஒரு வருடத்திற்கு வரிச்சலுகை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
வரி விதிக்கப்படும்
உக்ரைன் உணவு தானிய இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற திருத்தங்களையும் நிராகரித்துள்ளது. மேலும் வரிகள் மற்றும் ஒதுக்கீடுகளின் இடைநிறுத்தம் ஜூன் 2025 வரை தொடர அனுமதிக்கப்படும்.
இதனிடையே ஐரோப்பிய ஒன்றிய வேளாண் மக்களின் போராட்டங்களை கருத்தில் கொண்டு, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் விதிக்கப்பட்ட இறக்குமதி அளவை மீறினால் இறைச்சி கோழி, முட்டை மற்றும் சர்க்கரைக்கு வரி விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
2022ல் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் உக்ரேனிய உணவு தானியங்கள் மீதான இறக்குமதி வரிகள் மற்றும் ஒதுக்கீடுகள் நீக்கப்பட்டன. இதனால் ஐரோப்பிய நாடுகளின் வேளாண் மக்கள் கொந்தளிக்கத் தொடங்கினர்.
உக்ரைன் தானிய விவகாரம்
மட்டுமின்றி, இது மலிவான உக்ரேனிய இறக்குமதியால் ஏற்படும் நியாயமற்ற போட்டி என்றும் குறிப்பிட்டுள்ளனர். உக்ரைன் தானிய விவகாரத்தில் வாக்குஎடுப்பு முடிந்துள்ளது.
அடுத்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். பெரும்பாலான நாடுகள் உக்ரைன் தானிய இறக்குமதிக்கு ஆதரவு என்பதால், நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.