;
Athirady Tamil News

BBC ஸ்கொட்லாந்து ஊடக தொகுப்பாளர் 32 வயதில் அதிர்ச்சி மரணம்

0

BBC ஸ்கொட்லாந்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த 32 வயது இளைஞர், குறுகிய உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32 வயதில் மரணம்
நிக் ஷெரிடன் (Nick Sheridan) என்ற இளைஞர் BBC ஸ்கொட்லாந்து ஊடகத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

Drivetime, Lunchtime Live மற்றும் Sunday Show ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் நிக் பிரபலமானார்.

இந்த நிலையில் தனது 32 வயதில் நிக் ஷெரிடன் உயிரிழந்துவிட்டதாக BBC ஸ்கொட்லாந்து இன்று சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளது.

அவர் குறுகிய உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

புத்தக தொடர்
தொகுப்பாளர் என்பதையும் தாண்டி The Case of the Runaway Brain மற்றும் The Case of the Phantom Treasure உள்ளிட்ட குழந்தைகளுக்கான புத்தக தொடர்களையும் நிக் எழுதியுள்ளார்.

நிக் ஷெரிடனின் இறப்பு குறித்து BBC ஸ்கொட்லாந்து செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களின் தலைவர் கேரி ஸ்மித் வெளியிட்ட அறிக்கையில், ”நிக் ஒரு அற்புதமான சக ஊழியர். அவர் மிகவும் திறமையான பத்திரிகையாளர், தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளர். மேலும், அவரைச் சுற்றியுள்ள அனைவரின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்யும் அரிய மனிதர்களில் ஒருவர்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல் முன்னாள் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜனும் அவரது மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.