அதிகரிக்கும் பதற்றம்: போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள வடகொரியா
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு இராணுவத்தின் போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவும், தென் கொரியாவும் ஆயிரக்கணக்கான துருப்புகளுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
போர் நடவடிக்கை
அதன்படி, வடகொரியாவின் மேற்கில் உள்ள ஒரு பாரிய இராணுவ நடவடிக்கை தளத்தில் துருப்புக்களை ஆய்வு செய்த கிம் போர் நடவடிக்கைளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில்,வட கொரியாவின் அரச செய்தி நிறுவனம், ‘இராணுவம் தற்போதுள்ள சூழ்நிலையின் தேவைகளுக்கு ஏற்ப போர் தயாரிப்புகளை தீவிரப்படுத்தும் ஒரு புதிய உச்சக்கட்டத்தை மாறும் வகையில் கொண்டு வர வேண்டும்.
ஏவுகணை சோதனை
நம் இராணுவம் சரியான போர் தயார்நிலைக்கான அதன் யுத்த திறன்களை விரைவாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உண்மையான போர் பயிற்சிகளை சீராக தீவிரப்படுத்த வேண்டும்’ என கிம் உத்தரிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வட கொரியா இராணுவத்தை நவீனமயமாக்கும் விதமாக தொடர்ந்தும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.