காசாவில் நாளாந்தம் கொல்லப்படும் பெண்கள் : அதிர்ச்சியளிக்கும் தகவல்
“சர்வதேச சமூகத்தின் மௌனம் பாலஸ்தீனிய பெண்களின் இனப்படுகொலைக்கு பங்களித்துள்ளது” என்று சர்வதேச மகளிர் தினத்தன்று, காசாவின் சுகாதார அமைச்சகம், குற்றம்சாட்டியுள்ளது.
உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வேளையில், காசா பகுதியில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 63 பெண்கள் கொல்லப்படுவதாக ஐ.நா.வின் நிவாரண மற்றும் பணி நிறுவனமான UNRWA தெரிவித்துள்ளது.
9,000 பாலஸ்தீனப் பெண்கள் படுகொலை
அதே நேரத்தில், இஸ்ரேல் முற்றுகையிட்ட பகுதியில் இனப்படுகொலைத் தாக்குதலை நடத்தியதில் இருந்து கிட்டத்தட்ட 9,000 பாலஸ்தீனப் பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“சர்வதேச சமூகத்தின் மௌனம் பாலஸ்தீனிய பெண்களின் இனப்படுகொலைக்கு பங்களித்துள்ளது” என்று சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா வியாழனன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“காஸாவில் உள்ள 60,000 கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழப்பு மற்றும் சரியான சுகாதாரப் பாதுகாப்பு இல்லாததால் அவதிப்படுகின்றனர்” என்று அவர் மேலும் கூறினார்.
கொடூரமான போரை சகிக்கும் பெண்கள்
இந்த ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி தினத்தின் கருப்பொருள், ‘பெண்களில் முதலீடு செய்யுங்கள்: முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்,” என்பது UNRWA வின் கருப்பொருள்.
இந்த நாளில், “காசாவில் உள்ள பெண்கள் இந்த கொடூரமான போரைத் தொடர்ந்து சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.” “குறைந்தது 9,000 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பலர் கட்டடங்ககளுக்கு அடியில் உள்ளனர்” என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
On #InternationalWomensDay, the women in #Gaza continue to endure the consequences of this brutal war.
‼️ At least 9,000 women have been killed, many more are under the rubble.
‼️ On average, 63 women are killed in #Gaza per day – 37 are mothers who leave their families behind.
— UNRWA (@UNRWA) March 8, 2024