;
Athirady Tamil News

சாய்ந்தமருது அல்-ஹிலாலில் புலமையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் மின்னும் புலமைகளுக்கு புகழாரம் !

0

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் இருந்து கடந்த 2023 இல் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய புலமையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் “Glittering Scholars-2024” (மின்னும் புலமைகளுக்கு புகழாரம்) நிகழ்வு பாடசாலை அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று (09) நடைபெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புலமையாளர்களை பாராட்டி கௌரவித்தார். ஒவ்வொரு வருடமும் கணிசமான மாணவர்களை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்யச் செய்யும் நூற்றாண்டுகளுக்கு மேல் வரலாற்றை கொண்ட இந்த பாடசாலையின் மாணவர்களை கௌரவிக்கும் விதமாக சாய்ந்தமருது பிரதான வீதியூடாக வேண்ட வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

புலமையாளர்களை பாராட்டி கௌரவித்த இந்த நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். மேலும், கல்முனை வலயக்கல்வி பணிமனை கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், வலயக் கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், சாய்ந்தமருது கல்வி கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக உத்தியோகத்தர்கள், பாடசாலை பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், வர்த்தக பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் ஆகியோருக்கு இந்நிகழ்வில் பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.