உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப் பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…
அருணாச்சல பிரதேசத்தில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகிலேயே மிக நீளமான இரட்டை சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அசாமின் தேஜ்பூரில் ராணுவ பிராந்திய தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியை அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியை இணைக்கு நெடுஞ்சாலை ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆண்டில் 5 மாதங்கள் கடும் பனிப்பொழிவு காரணமாக இப்பகுதியில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்படும். இதற்கு தீர்வு காணும் வகையில் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள ‘சேலா பாஸ்’ பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க கடந்த 2019 பிப்ரவரி 9ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 13,000 அடி உயரத்தில், சுமார் 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு அசாமின் கவுஹாத்தி முதல் அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் நகர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப்பிரதேசத்தின் இட்டாநகரில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அசாமின் கவுஹாத்தி முதல் அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் நகர் வரையிலான சுமார் 12 கிலோ மீட்டர் சுரங்கப்பாதையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், எல்லையோர கிராமங்களை கடைசி கிராமங்கள் என காங்கிரஸ் புறக்கணித்ததாக குற்றச்சாட்டினார்.
மோடியின் குடும்பம் யார் என்று இந்திய கூட்டணி கட்சிகள் தன்னை அசிங்கப்படுத்துவதாகவும் ஆனால், இங்குள்ள ஒவ்வொருவரும் தனது குடும்பம் என்றும் பிரதமர் கூறினார். ஒவ்வொரு செங்கற்களாக ஒன்றிணைந்து ’விக்சித் பாரத்’ என்ற அமைப்பை உருவாக்கி, இளைஞர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக இரவு பகலாக தாம் உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். வடகிழக்கு இந்தியாவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக செய்ததைச் செய்ய காங்கிரசுக்கு 20 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.