;
Athirady Tamil News

யாழில். தீவக கடற்தொழிலாளர்கள் போராட்டம்

0

யாழ்ப்பாண கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி வேணைப் பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் இன்றைய தினம் தினம் செவ்வாய்க்கிழமை கண்டன போராட்டத்தை முன்னெடுத்ததுடன் , யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

அத்துமீறிய ரோலர் படகுகளினால் தொடர்ச்சியாக எமது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

அதனை தடுத்து நிறுத்துமாறு இலங்கை மற்றும் இந்திய உயர் மட்டம் வரை மகஜர்களை கையளித்தது மட்டுமல்லாது கண்டன போராட்டங்களையும் மேற்கொண்டோம்.

ஆனால் எமது கோரிக்கை தொடர்பில் இதுவரை சாதகமான பதில் எதுவும் வழங்கவில்லை.

ஆகவே எமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்து நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் கோரியுள்ளோம்.

எமது மஜகருக்கான பதிலை இம் மாதம் 25 ஆம் திதிக்கு முன்னர் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் வழங்காத சந்தர்ப்பத்தில் 25ஆம் திகதிக்கு பின்னர் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காக திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.