லண்டன் சிறைசாலையில் 194 கைதிகள் தற்காலிக இடமாற்றம்
லண்டன் பிரின்ஸ்டவுன் மத்தியச்சிறைசாலையில் நச்சு கதிர்வீச்சு அலைகளால் 194 கைதிகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த பிரின்ஸ்டவுன் நகரில் புகழ்பெற்ற டார்ட்மூர் மத்தியச்சிறைச்சாலையில் கடந்த சில மாதங்களாக நச்சு கதிர்வீச்சு அலைகள் வீசப்படுவது கண்டறியப்பட்டது.
சோதனையின்போது சிறை வளாகத்தில் ரேடான் என்னும் கதிரியக்க தனிமத்தின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இதனால் காற்றில் அளவுக்கதிமான நச்சு கதிர்வீச்சு அலைகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சிறைச்சாலையில் இருந்து 194 கைதிகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு வேறுசிறைகளில் அடைக்கப்பட்டனர்.
சிறைவளாகத்தில் பரவி இருக்கும் ரேடான் அளவை குறைக்கும் பணி நடந்து வருகிறது.