லொட்டரியில் தினமும் ஒருவர் கோடீஸ்வரர் ஆகலாம்.., கேரள அரசின் புது தகவல்
கேரளாவில் விற்பனை செய்யப்படும் லொட்டரி சீட்டுகள் மூலம் இனி தினமும் ஒருவர் கோடீஸ்வரர் அந்தஸ்தை பெற முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளால் பலர் வாழ்க்கையை தொலைத்த நிலையில், மாநில அரசு அதற்கான தடையை விதித்தது.
ஆனால், கேரள மாநிலத்தில் லொட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் லொட்டரி சீட்டுகள் விற்பனை இன்னும் அதிகமாக இருக்கும்.
கேரளா லாட்டரி நிறுவனம்
கேரளாவில் நாள்தோறும் 50 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை முதல் பரிசு கொண்ட லொட்டரி சீட்டுகள் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில், இந்த தொகையை ஒரு கோடி ரூபாயாக உயர்த்த கேரளா லொட்டரி நிறுவனம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
மேலும், இது தொடர்பாக கேரள அரசிடம் பரிந்துரை செய்ததாக தெரிகிறது. இதற்கு, கேரள அரசும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுவதால் தினமும் ஒருவர் கோடீஸ்வரர் ஆக முடியும் என்று தெரிகிறது.
இது ஒருபுறம் இருந்தாலும் ஒருவரை கோடீஸ்வரர் ஆக்குவதற்கு பல ஆயிரக்கணக்கானோரை நஷ்டமடைய செய்வதாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.