கிளிநொச்சியில் சிறுபோக செய்கை கூட்டத்தில் ஊடகவியலாளரை வெளியேற்ற முயற்சி : அம்பலமான மோசடி
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான 2024ம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் செய்தி அறிக்கையிடலுக்காக சென்ற அரசாங்க தகவல் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளரை பல்வேறு மோசடிகளுடன் தொடர்பு பட்ட கமக்கார அமைப்பின் பிரதிநிதியொருவர் அவதூறாக பேசி கூட்டத்தில் இருந்து வெளியேற்றுமாறு கூறியதால் அமைதியின்மை ஏற்பட்டு கலந்துரையாடல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்பாசனக் குளமான இரணைமடுக்குளத்தின் 20024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்செய்கை மேற்கொள்ளும் அளவுகளை தீர்மானிக்கும் ஆலோசனை கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் (பதில்) பணிப்புக்கு அமைவாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் மற்றும் பிரதி நீர்ப்பாசனத்திணைகளத்தின் பணிப்பாளர் ஆகியோரின் தலைமையில் நேற்று (15.02.2024) கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டம் ஆரம்பமாகி சிறிது நேரத்தில் இதில் கலந்து கொண்டிருந்த பெருந்தொகையான நீர்வரி உரிமைகளை தடுத்து பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்து வந்த ஒருவர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த; ஊடகவியலாளரை உடனடியாக வெளியேற்றுமாறு குறிப்பிட்டு கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்தியதால் அமைதியின்மை ஏற்பட்டு கலந்துரையாடல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அதாவது இரணைமடுக்குள்தின் கீழ் பெரும் போக மற்றும் சிறுபோக பயிர்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளிடமிருந்து பயிர்செய்கை குழுவின் அனுமதியுடன் பல மில்லியன் ரூபா நிதிகளை கடந்த காலங்களில் அறவீடு செய்து உரிய முறைப்படி வங்கிளில் வைப்பு செய்யாமலும் உரிய நியமங்களுக்கு மறாகவும் அபிவிருத்தி வேலைகளுக்கான கேள்வி கோரல்கள் இன்றியும் உரிய திணைக்கள அதிகாரிகளின் அனுமதிகளின்றியும் முறையற்ற விதத்தில் நிதிகளைச் கையாடல் செய்யப்பட்டமை தகவலறியும் உரிமைச்சட்டம் மூலமும் ஏனைய தகவல்கள் மூலமும் கன்டறியப்பட்டு செய்திகள் வெளியாகியிருந்தன.
மோசடிகளை முன்னெடுக்க முடியாத நிலை
இதனைவிட கடந்த 2023ம் ஆண்டு சிறுபோக செய்கையின் போது புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்பினால் குறிப்பிட்ட சில விவசாயிகளுக்குரிய சிறுபோக பங்குரிமை கமநல சேவை நிலையத்தினால் நிறுத்தப்பட்டதாக தெரிவித்து அதனை பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்தமை மாவட்ட அரச அதிபர் தலைமையில் நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டன.
இவ்வாறான செய்திகள் வெளி வருகின்றமையால் ஒருசில அரச அதிகாரிளின் துணையுடன் தமது முறைகேடுகள் மோசடிகளை முன்னெடுக்க முடியாத நிலையை கருத்தில் கொண்டே குறித்த அமைப்பினுடைய செயலாளரால் குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உரிய நியமங்களிள் படி 2000 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கமநல அவிருத்தி கட்டளை சட்டம் பிரிவு 60 பிரகாரம் பதிவு செய்யப்படாமலும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பதிவு செய்யப்படாத நிலையிலுள்ள அமைப்பு தொடர்பான செய்திகளை மூடி மறைக்கவும் ஊழல் மோசடிகளை மேற்கொள்ளும் வகையிலேயே இவ்வாறான செயற்பாடு அமைந்துள்ளது.
எனவே எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களின் பங்குபற்றுதலுடன் வெளிப்படைத் தன்மையுடன் இதுபோன்ற தீர்மானங்கள் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.