;
Athirady Tamil News

கோவையில் பிரதமா் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி!

0

கோவையில் மாா்ச் 18-இல் நடைபெறவுள்ள பிரதமா் நரேந்திர மோடியின் வாகனப் பிரசாரத்துக்கு சிறு மாற்றங்களுடன் கோவை மாநகர காவல்துறை அனுமதியளித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுதித்தியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

இதன் தொடர்சியாக கோவையில் மாா்ச் 18-இல் பிரதமா் நரேந்திர மோடியின் வாகனப் பிரசாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மாநகர காவல்துறையிடம் அனுமதி கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டண் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து

கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் வாகனப் பிரசாரம் நடைபெற உள்ளது.ஏற்கனவே கோவையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. மேலும் 10, 12 பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதால் இதுவரை எந்த வாகனப் பிரசாரத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என விளக்கம் அளித்து பிரதமரின் வாகனப் பிரசாரத்திற்கு பாதுகாப்பு வழங்க இயலாது என மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சார்பில் கோவை மாவட்ட பாஜக தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷஅ, பிரதமர் மோடியின் வாகனப் பிரசாரத்திற்கு அனுமதி வழங்குவதில் இருக்கு பிரச்னை குறித்து காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, பிரதமரின் வாகனப் பிரசாத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும், வாகனப் பிரசாரம் செல்லும் வழி, தூரம் மற்றும் நேரத்தை காவல்துறை முடிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். பிராசாரம் செல்லும் பகுதியில் பதாகைகள் வைக்க அனுமதி மறுத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணிக்கு சிறு மாற்றங்களுடன் அனுமதி அளித்து கோவை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அதாவது, கோவை மேட்டுப்பாளையம் கங்கா மருத்துவமனையில் இருந்து ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகம் வரை பேரணி மேற்கொள்ளலாம்.

கண்ணப்பன் நகர் பிரிவில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை பாஜகவினர் அனுமதிகோரிய நிலையில், மருத்துவமனைக்கு இடையூறு இல்லாத வகையில் பேரணியின் தூரத்தை 4 கிலோ மீட்டரில் இருந்து 2.5 கி.மீ ஆக குறைத்து கோவை மாநகர காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மோடியின் பயணத்திட்டம்

கோவையில் நடை திங்கள்கிழமை மாலை நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு திங்கள்கிழமை(மார்ச் 18)மாலை 4.30 மணிக்கு கா்நாடக மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு மாலை 5.30 மணிக்கு வருகிறாா். அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு காா் மூலம் வாகனப் பிரசாரத்தை மேற்கொள்ளும் பிரதமா் மோடி மாலை 6.45 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறாா். அதைத் தொடா்ந்து, கோவை அரசு விருந்தினா் மாளிகைக்கு இரவு 7 மணிக்கு வரும் பிரதமா் இரவில் அங்கு தங்குகிறாா்.

19-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு கோவை அரசு விருந்தினா் மாளிகையில் இருந்து புறப்பட்டு 9.40 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையம் வந்தடைகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் கேரள மாநிலம், பாலக்காடு செல்லும் பிரதமா் காலை 11.40 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

அதன் பின்னா் பாலக்காட்டிலிருந்து பிற்பகல் 1 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சேலம் செல்லும் பிரதமா் மோடி அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறாா். அதன் பின்னா் சேலம் விமான நிலையம் செல்லும் பிரதமா் பிற்பகல் 2.25 மணிக்கு விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் செல்கிறாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.