மொத்தம் 114 மில்லியன் வாக்காளர்கள்! புடினுக்கு எதிரான Noon.. குவிக்கப்பட்ட பாதுகாப்பு, பொலிஸ் படைகள்
ரஷ்யாவின் மாஸ்கோவில் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் பலர் குவிக்கப்பட்டுள்ளனர்.
114 மில்லியன் வாக்காளர்கள்
மறைந்த எதிர்க்கட்சி ஆர்வலர் அலெக்ஸி நவல்னியினால் ”Noon against Putin” எதிர்ப்பு ஆரம்பத்தில் ஊக்குவிக்கப்பட்டது.
உக்ரைனில் இருந்து இணைக்கப்பட்ட 4 பிரதேசங்களில் உள்ள வாக்காளர்களுடன் சேர்த்து ரஷ்யாவில் மொத்தம் 114 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர்.
சனிக்கிழமை மாலைக்குள் 63 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க சென்றதாக ரஷ்ய மத்திய தேர்தல் குழு தெரிவித்தது.
தற்போது தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், ”Noon against Putin” போராட்டத்தில் கலந்துகொள்ள தகுதியுள்ள வாக்காளர்களுக்கு ரஷ்ய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினர்
அதன்படி வாக்களிக்கும் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை (நேற்று ) நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில், அதிகாரிகளை திணறடிக்கும் வகையில் வாக்காளர்கள் குவியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, மாஸ்கோவின் கடுமையான எதிர்ப்பு சட்டத்தை மீறுவதன் மூலம் தங்களுக்கு ஆபத்தை விளைவிக்காமல் எதிர்ப்பதற்காக, நாட்டின் 11 நேர மண்டலங்களில் சரியாக நண்பகல் வேளையில் வாக்களிப்பு நிலையங்களில் கூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் பலர் குவிக்கப்பட்டுள்ளனர்.