‘கோவையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தினேன்’: மோடியின் முழு உரை
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கோவையில் நேற்று வாகனப் பேரணியில் ஈடுபட்ட மோடி, சேலத்தில் இன்று கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது:
“கோட்டை மாரியம்மனை வணங்கி உரையை தொடங்குகிறேன். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும் எனக்கும் கிடைத்து வரும் மிகப்பெரிய மக்கள் ஆதரவை நாடே பார்த்து கொண்டுள்ளது.
கோவையில் மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கொண்டே பயணித்தேன். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் ஆதரவை கண்டு திமுக தூக்கம் கலைந்துவிட்டது.
இந்த முறை தமிழகத்தில் விழும் ஒவ்வொரு வாக்கும், பாஜகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு, மூன்றாவது பொருளாதாரமாக மாறுவதற்கும், விவசாயிகள் பயன்பெற 400 தொகுகளை வெற்றி பெற வேண்டும்.
தே.ஜ. கூட்டணி வலுபெற்றுள்ளது. பாமக நமது கூட்டணியில் இணைந்துள்ளது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக தொண்டர்களை வரவேற்கிறேன்.