வரலாறு காணாத வெப்பம்; தாங்க முடியாமல் கடற்கரையை நோக்கி ஓடும் மக்கள்!
வெயிலின் வெப்பம் தாங்காமல் மக்கள் கடற்கரையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சுட்டெரிக்கும் வெப்பம்
வரலாறு காணாத கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் நேற்று அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மக்கள் அவதி
இனி வரும் நாட்களில் இதே நிலைமை நிலவும் என்பதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை அதிகாரிகள் வெளியிட்டனர்.
உஷ்ணத்தை தணிக்கவும், இதமான காற்று வாங்கவும் மக்கள் நீர் நிலைகள் அருகேயும் கடற்கரைகளையும் நாடுவதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, ஐபனிமா மற்றும் கோபகபனா கடற்கரைகள் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் காடுகளை அழிப்பது தொடர்வதால் வெப்ப நிலை இன்னும் மோசமாகும் என காலநிலை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.