;
Athirady Tamil News

கால்பந்து வீரரின் காலில் பட்ட காயத்தில் இளவரசர் ஹரியின் முகம்!

0

பிரித்தானியாவில் கால்பந்து வீரர் ஒருவரின் காலில் ஏற்பட்ட காயத்தில், இளவரசர் ஹரியின் முகம் போல் உருவம் பதிந்துள்ளது.

ஐந்து வீரர்கள் பங்கேற்று விளையாடும் நட்பு ரீதியான கால்பந்து போட்டி பர்மிங்காமில் நடந்தது.

இப்போட்டியில் ஆடம் பிரைஸ் (37) என்ற வீரரின் காலில் காயம் ஏற்பட்டது. அவர் அதனை உற்றுப் பார்த்தபோது, அதில் இளவரசர் ஹரியின் முகத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

சசெக்ஸ் பிரபுவின் முகம் நீலம் மற்றும் ஊதா நிற காயத்தில் தென்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஒரு பிரபலத்தின் முகம் இவ்வாறு காணப்படுவது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு முன்னாள் கால்பந்து வீரர் கேரி லினெக்கரின் உருவம் பெண்ணொருவரின் சிப்சில் காணப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.