;
Athirady Tamil News

திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரம்: இடைக்காலத் தடை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு எதிராகத் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைக்கு திருகோணமலை மேன்முறையீட்டு குடியியல் நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது.

இதனால் நிர்வாக சபை தொடர்ந்து தடையின்றி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணேஸ்வரர் ஆலயத்தின் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் 2026 ஆம் ஆண்டு வரைக்கான நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தலைவர் சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் திருகோணமலையில் நேற்று (19.03.2024) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மீளாய்வு மனு விசாரணை
மேலும் தெரிவிக்கையில்,

“திருகோணமலை மேன்முறையீட்டு குடியியல் நீதிமன்றில் நீதிமுறை மீளாய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எமது நிர்வாக சபைக்கு எதிரான இடைக்கால உத்தரவு தள்ளுபடி செய்யப்பட்டது.

பதிலாக நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகத்துக்குத் தடை விதிக்கப்பட்டு எமது நிர்வாகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் 24 ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக 18 நாட்களுக்கு மகோற்சவம் வெகு விமர்சையாக இடம்பெறும்.” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.