மிலேச்சத்தனமாக செயற்பட்ட பொலிஸார்!.. மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம்!.. சிறீதரன் ஆவேசம்
ஒரு மதத்தின் சமய வழிபாடுகளை நிறுத்தி பொலிஸாரும் இலங்கை அரசாங்கமும் மிலேச்சத்தனமாக நடந்துகொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (20.03.2024) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற அநியாயமான கைதுகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் எழுத்துமூலமான கடிதங்களை வழங்கியுள்ளேன்.
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை பேரினவாதத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.