யாழ். பல்கலை மாணவர்கள் முறைப்பாடு
வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸ் அராஐகங்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மகாசிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.