பிரான்சில் மில்லியன் கணக்கில் வீதிக்கிறங்கிய அரச ஊழியர்கள்
பிரான்சில், ஆசிரியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உட்பட மில்லியன் கணக்கான அரச ஊழியர்கள் பாரிய வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்போது, அவர்கள் சம்பள உயர்வு கோரியும், அரசின் கல்வி சீர்திருத்தங்களை கண்டித்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5.7 மில்லியன் அரசு ஊழியர்கள்
குறித்த போராட்டத்திற்கு ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொது நிர்வாக அதிகாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, இந்த வேலை நிறுத்தத்தில் 5.7 மில்லியனுக்கும் அதிகமான பிரான்ஸ் அரச ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பள உயர்வு
மேலும், பிரான்ஸ் பாடசாலைகளில் தரம் 6க்குப் பிறகு மாணவர்களின் கற்றல் அளவை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தும் அரசின் முடிவும் ஆசிரியர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தொழிலாளர்களின் சம்பள உயர்வு பணவீக்க உயர்வுக்கு ஏற்ப இல்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.