பொலிஸார் நீதிமன்றை தவறாக வழிநடாத்துகின்றார்கள் – யாழில் சட்டத்தரணி மனு தாக்கல்
பொலிஸார் நீதிமன்றை தவறாக வழிநடத்தி, நீதிமன்ற அதிகாரத்தை கீழ்மைப்படுத்துகிறார்கள் என யாழ்ப்பாண நீதிமன்றில் மன்றில் சட்டத்தரணி ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபில் ஒருவருக்கு எதிராகவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காணி மோசடி வழக்கொன்றில் சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றில் முன் பிணை கோரியிருந்தார்.
இந்நிலையில் , நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் ” மனு தாரர் தான் செய்த குற்றத்தை உணர்ந்து , தன்னை பொலிஸார் எந்நேரமும் கைது செய்யலாம் என்ற அச்சத்தை எதிர்நோக்கி, முன் பிணை விண்ணப்பம் செய்தார்” என்றும் , மனுதாரர் சந்தேக நபராக முற்படுத்த வேண்டிய நபர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வாசகங்களானது நீதிமன்றினால் ஆக்கப்பட்ட கட்டளையை வேண்டும் என்றே தவறாக முன்னிலைப்படுத்துவதாகவும் , நீதிமன்ற கௌரவத்தை கீழ்மைப்படுத்துவதாகவும் , சட்டத்தரணி மனு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 1ஆம் திகதி நடைபெறும் என மன்று திகதி குறித்துள்ளது.