சீனாவுக்கு விழுந்த பேரிடி: இந்தியாவுக்காக முன்வந்த அமெரிக்கா
சர்ச்சைக்குள்ளாகியுள்ள அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக இந்திய பிரதமர் மோடி அருணாச்சலப் பிரதேசத்திற்கு பயணித்தை அடுத்து சீனா கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தது.
குறித்த பிரதேசத்தை ‘தெற்கு திபெத்’ என உரிமை கொண்டாடி வரும் சீனா, இப்பகுதிக்கு ‘ஸாங்னான்’ எனப் பெயர் சூட்டி அழைத்து வருகிறது.
இந்தியாவின் ஒரு பகுதி
அத்தோடு, இந்திய தலைவர்கள் இந்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கு சீனா கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
சீனா இவ்வாறு உரிமைகோரி வரும் நிலையில், அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா எதிர்ப்பு
இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தி செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறுகையில் “அருணாச்சல பிரதேசத்தை இந்திய நிலப்பரப்பாக அங்கீகரிக்கிறோம்.
ஊடுருவல் அல்லது அபகரித்தல், இராணுவம் மூலமாக உண்மையான எல்லைக்கோட்டை தாண்டி தங்களது நிலப்பரப்பு என ஒருதலைப்பட்சமாக உரிமைக்கோருவதற்கான எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது” என தெரிவித்துள்ளது.