;
Athirady Tamil News

இனி கோவிலுக்குள் இந்த ஆடையெல்லாம் அணிந்து வரக்கூடாது – வெளியான அறிவிப்பு!

0

பல்வேறு கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆடைக் கட்டுப்பாடு
கோயில்களில் பக்தர்கள் வழிபட வருகையில் அதற்குரிய ஆடையில் வரவேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அதன்படி, கேரளாவில் பல கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது, கர்நாடகாவிலும் கோயிலுக்கு வருபவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அமல்படுத்தும் நிலை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து தனியார் கோயில்கள் மற்றும் மடங்களின் அர்ச்சர்கள் மற்றும் அறங்காவலர்களின் கூட்டுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், ர்நாடகா மாநிலம் முழுவதும் கோயில்களில் இந்திய ஆடை அணிந்து வருபவர்கள் மட்டுமே கடவுளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய அறிவுறுத்தல்
மேலும், ஆண்கள் ஷார்ட்ஸ், பெர்முடா, கிழிந்த ஜீன்ஸ், மார்பைக் காட்டும் டி-சர்ட் அணிந்து கோயிலுக்கு வரக்கூடாது. பெண்கள் மிடி, கிழிந்த ஜீன்ஸ், ஷார்ட்ஸ் அணிந்தால் கோயிலுக்குள் நுழைய முடியாது. பெண்கள் சேலை, சுடிதார், குர்தா அணிய வேண்டும்.

ஆண்கள் பஞ்சே, ஷெர்வானி, பேன்ட், சட்டை அணிய வேண்டும். இறுக்கமான ஜீன்ஸ் அணிய வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து ஷார்ட்ஸ், டி- சர்ட், நைட் பேண்ட் அணிந்து வருபவர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி இல்லை என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.