புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய இளவரசி!
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கீமோதெரபிக்கு உட்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றினை நேற்று(22) வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் எந்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தவில்லை.
சிகிச்சை
இளவரசி தான் நன்றாக இருப்பதாகவும் குணமடைய உதவும் விடயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு நாளும் வலுவடைகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தனக்கு சிகிச்சை அளிக்கும் போது “நேரம், இடம் மற்றும் தனியுரிமை” தொடர்பில் மதிப்பளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், இளவரசி கேட் மிடில்டன் பல வாரங்களாக பொது இடங்களிற்கு செல்லாத காரணத்தினால் ஊகங்கள் மற்றும் வதந்திகளுக்கு வழிவகுத்தது.