இந்தோனியாவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை?
இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல்பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றையதினம் (22-03-2024) காலை 11.22 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது என அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும் குறித்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.