உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கிய பிரித்தானிய விஞ்ஞானிகள்., ரூ.65 கோடி நிதி
ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோரை பலிவாங்கும் நுரையீரல் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பிரித்தானிய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பிரான்சிஸ் கிரிக் நிறுவனம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி விஞ்ஞானிகள் இணைந்து நுரையீரல் புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி வருகின்றனர்.
அதற்கு ‘Lungwax’ என்று பெயரிடப்பட்டது. இதுவே உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி ஆகும்.
இந்த தடுப்பூசி நுரையீரல் புற்றுநோய் செல்களை கண்டறிந்து அகற்றும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்க ஆராய்ச்சியாளர்களுக்கு £1.7 மில்லியன் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 65 கோடி) நிதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய LungVax தடுப்பூசியானது Oxford/AstraZeneca COVID தடுப்பூசியைப் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்.
இது முதலில் மூவாயிரம் டோஸ் தடுப்பூசியை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும்.