எதுவென்றாலும் ரணிலே தீர்மானிக்கவேண்டும் : மகிந்த வெளியிட்ட தகவல்
எதிர்காலத்தில் அதிபர் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா முதலில் நடத்தப்படவேண்டும் என்பது தொடர்பில் தற்போதைய அதிபர் தீர்மானிக்கவேண்டுமெனவும் அவருக்கு சாதகமான வாக்கெடுப்பை நடத்த முடியும் எனவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள புத்தாண்டுக்கு இரண்டு சுப அட்டைகள் வழங்கப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அதிபர், தான் சுபமுகூர்த்தம் செய்பவர் அல்லாததால், என்ன சுபகாரியங்கள் வழங்கப்படுமென காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
திடீரென சென்ற மகிந்த
தம்புள்ளை முன்னாள் மேயர் ஜாலிய ஓபாதவின் வீட்டிற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த 22ஆம் திகதி பிற்பகல் திடீரென சென்றுள்ளார்.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னாள் மேயரின் வீட்டிற்கு வரவுள்ளார் என்பதை அறிந்து கலேவெல, நாவுல, பல்லேபொல, தம்புள்ளை போன்ற பிரதேசங்களிலிருந்து முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்களும், அருகில் வசிப்பவர்கள் குழுவும் வந்தனர்.
தேநீர் விருந்தில் கலந்து கொண்டு
அநுராதபுரத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த மகிந்த ராஜபக்ச ,முன்னாள் மேயர் ஜாலிய ஓபாதவின் வீட்டிற்கு வந்து தேநீர் விருந்தில் கலந்து கொண்டு அங்கிருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட போது ஊடகவியலாளர்கள் தன்னிடம் இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.