ரொட்டி, தேநீரை காலை உணவாக உண்ட 2 குழந்தைகள் மரணம்! குடும்பத்தினர் 5 பேர் தீவிர சிகிச்சையில்..அதிர்ச்சி சம்பவம்
இந்திய மாநில சத்தீஸ்கரில் காலை உணவு உட்கொண்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரொட்டியுடன் தேநீர்
சத்தீஸ்கர் மாநிலம் கிதவுரி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஷ்ராவன், ராஜ்குமாரி. இவர்களது மூன்று பிள்ளைகள் தேவ்ராத், ஆனந்த் (6) மற்றும் அம்ரிதா (3).
இவர்கள் அனைவரும் காலை உணவாக ரொட்டியுடன் தேநீர் எடுத்துக் கொண்டுள்ளனர். சிறிது நேரத்திலே அனைவரும் வாந்தியெடுத்து மயக்கமடைந்துள்ளனர்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பிள்ளைகள் ஆனந்த், அம்ரிதா சிகிச்சையின்போது பரிதாபமாக உயிரிழந்தனர்.
Food Poisoning
இதனையடுத்து ஷ்ராவனுடன் சேர்த்து மொத்தம் 5 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். Food Poisoning காரணமாக பிள்ளைகள் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
எனினும் அவர்கள் உண்ட ரொட்டி, தேநீர் மற்றும் பிற உணவுப் பொருட்களின் மாதிரிகளை பொலிஸார் ஆய்வுக்காக சேகரித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து மரண அறிக்கை செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.