அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது: வெளியான தகவல்
சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கையினால் உணவு, மருந்து, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளியிடுவதற்கு காலதாமதமாகி கட்டணம் செலுத்த நேரிட்டதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
சுங்க அதிகாரிகள் 5 நாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து கொள்கலன்கள் வேகமாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிப்பு
மேலும், உணவு மற்றும் மருந்து கொள்கலன்கள் அதிகளவு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை காரணம் காட்டி பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.