;
Athirady Tamil News

54 ஆண்டுகளுக்கு முன்பே பிரபல பத்திரிக்கை கணித்த 2024-ன் முதல் சூரிய கிரகணம்- வைரலாகும் புகைப்படம்

0

இந்த வருடம் ஏப்ரலில் நிகழவிருக்கும் அபூர்வ சூரிய கிரகணம் குறித்து 54 ஆண்டுகளுக்கு முன் பிரபல பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூரிய கிரகணம்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 8 ஏப்ரல் 2024 அன்று நிகழும். இது ஜோதிட மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏப்ரல் 8 அன்று நிகழவுள்ள சூரிய கிரகணம் இரவு 9:12 மணிக்கு தொடங்கி 1:25 மணி வரை நீடிக்கும். பல ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற அமைப்பில் சூரிய கிரகணம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் பூமியின் ஒரு பகுதி முற்றிலும் இருட்டாகிறது. இதுமட்டுமல்லாமல் நிலவு பூமிக்கு மிக அருகில் வருகிறது.

சூரியன், நிலவு மற்றும் பூமி அனைத்தும் நேர் பார்வையில் காட்சியளிக்கின்றன. எனினும் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மிகவும் அரிய, அபூர்வமான, வித்தியாசமான ஒரு கிரகணமாக இருக்கும்.

அன்றே கணித்த பத்திரிக்கை
அமெரிக்காவின் ஓஹியோவை தளமாகக் கொண்ட சுமார் 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு செய்தித்தாளின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதில், ஏப்ரல் 8, 2024 அன்று நிகழும் அபூர்வ சூரிய கிரகணம் பற்றி 1970 ஆம் ஆண்டிலேயே நாளிதழில் கணிக்கப்பட்டதை காண முடிகின்றது.

தற்போது இந்த நாளிதழின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.