சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு கடூழிய சிறைத்தண்டனை
சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சென் ஷியுவனுக்கு எதிரான இலஞ்சக் குற்றச்சாட்டு வழக்கில், அவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பினை சீன நாட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
முன்னாள் தலைவர் ஷியுவன் 11 மில்லியன் டொலர் பெறுமதியான இலஞ்சங்களைப் பெற்றிருந்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இலஞ்சக் குற்றச்சாட்டு
சீன கம்யூனிஸ்ட் கட்சியினால் நடத்தப்படும் பத்திரிகையில் ஷியுவன் பெற்ற இலஞ்சங்களின் தொகை மிகப் பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் நாட்டின் கால்பந்தாட்டத்துறைக்கு பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.