யுக்திய நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ள பெருந்தொகை போதைப்பொருட்கள்
9,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
யுக்திய நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இதுவரை குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைகளில் போதைப்பொருள் விற்பனை
நேற்றைய தினம் (26.03.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன் இதன்போது, பாடசாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.