மக்களவை தேர்தல்: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்? தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு!
ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் மதிமுகாவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
பம்பரம் சின்னம்
மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பொதுச்சின்னம் பட்டியலில் பம்பரம் இல்லை என்றும், அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களின் பட்டியலிலும் பம்பரம் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தேர்தல் ஆணையம் மறுப்பு
இதனையடுத்து பம்பரம் சின்னம் தொடர்பாக இன்று காலைக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று விளக்கமளித்துள்ளது. மேலும், ஒரு கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டு இருந்த சின்னத்தை ஒரு தொகுதிக்காக பொது சின்னமாக அறிவிப்பது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.