தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு வைத்தியசாலையை திறந்து வைத்த ரணில்
தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு வைத்தியசாலை அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் காலி கராபிட்டிய பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த மருத்துவமனைக்கு ஜேர்மன் – இலங்கை நட்புறவு மகளிர் வைத்தியசாலை என பெயரிடப்பட்டுள்ளது.
ஜேர்மன் அரசின் உதவியுடன் இந்தக் வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமி பேரிடருக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்டன.
மருத்துவ வசதிகள்
கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் இந்தக் கட்டிடம் அமைந்துள்ளமையினால், கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஏனைய பெண்களுக்கும் மிகவும் வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு குறித்த வைத்தியசாலையில், இந்த ஆறு மாடி மருத்துவமனையில் 640 படுக்கைகள், ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், ஆய்வகங்கள், சிசு தீவிர சிகிச்சை பிரிவுகள், சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் காணப்படுகிறது.