இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மின்மினிப் பூச்சிகள்
இலங்கையில் இரண்டு புதிய வகை மின்மினிப் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ருஹுணு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையினால் இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வலஸ்முல்ல ரம்மாலே வனப்பகுதியில் 2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் இந்த இரண்டு வகையான மின்மினிப் பூச்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மின்மினிப் பூச்சி
தெற்காசியாவில் காணப்படும் அரிய வகை மின்மினிப் பூச்சி இனத்தைச் சேர்ந்த இரண்டு இனங்கள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டமை இதுவே முதல் முறையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவற்றில் ஒன்று ருஹுணு பல்கலைக்கழகத்தின் பெயரிலும் மற்றொன்று ரம்மலே வனச்சரகத்தின் பெயரிலும் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.