ஒரு பாலினத் திருமண சட்டமூலத்திற்கு தாய்லாந்து நாடாளுமன்றம் அங்கீகாரம்
ஒரு பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் சட்டமூலத்துக்கு தாய்லாந்து நாடாளுமன்றம் நேற்று (27)அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டமூலத்திற்கு 399உறுப்பினர்கள் ஆதரவாகவும் 10 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
இதன்மூலம், தென்கிழக்காசியாவில் ஒரு பாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கும் நாடாக தாய்லாந்து விளங்கவுள்ளது.
120 நாட்களுக்குப் பிறகு
இந்த சட்டமூலம் தாய்லாந்தின் அனைத்து முக்கிய கட்சிகளின் ஆதரவையும் பெற்றதுடன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
குறித்த சட்டமூலம் இன்னும் 120 நாட்களுக்குப் (4 மாதங்களுக்கு) பிறகு நடைமுறைக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கீகாரம் வழங்குதல்
இச்சட்டமூலம் நடைமுறைக்கு வருவதற்கு நாடாளுமன்றத்தின் செனட் சபையும் அரசரும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வைக் குறைக்கவும், சமத்துவத்தை உருவாக்கவும் அனைத்து தாய்லாந்து மக்களுக்காகவும் இதைச் செய்தோம்,” என வரைவு சட்டமூலத்தின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டானுஃபோர்ன் புன்னகாந்தா, வாசிப்புக்கு முன்னதாக சட்டமியற்றுபவர்களிடம் தெரிவித்திருந்தார்.