;
Athirady Tamil News

உலகின் மிக அரிய சூரிய கிரகணம்! சந்திரனின் நிழலை நோக்கி ஏவப்படவுள்ள உந்துகணைகள்

0

உலகின் சில பகுதிகளில் அடுத்த மாதம் 8 ஆம் திகதி ஏற்படவுள்ள முழு சூரிய கிரகணத்தின் போது, சந்திரனின் நிழலுக்கு செல்லும் வகையில் நாசா மூன்று 3 உந்துகணைகளை ஏவ திட்டமிட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை, சந்திரனின் நிழலுக்கு மூன்று அறிவியல் ஒலி உந்துகணைகளை (Sounding Rockets) செலுத்துவதாக நாசா அறிவித்துள்ளது.

குறிப்பாக ஏப்ரல் 8 ஆம் திகதி வட அமெரிக்காவில் பகுதி சூரிய கிரகணம் நிகழும் போது இந்த உந்துகணைகளை ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.

வளிமண்டல பாதிப்பு
கிரகணப் பாதையைச் சுற்றியுள்ள வளிமண்டல இடையூறுகள், சூரிய ஒளி மற்றும் வெப்பநிலையின் வீழ்ச்சி பூமியின் மேல் வளிமண்டலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராய்வதை விண்வெளி நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக வர்ஜீனியாவில் உள்ள நாசாவின் வாலோப்ஸ் ஏவுதளத்தில் இருந்து குறித்த ஊந்துகணைகள் ஏவப்படவுள்ளன.

இந்த ஊந்துகணைகள் சந்திரன், சூரியனைக் மறைக்கும் போது உருவாகும் அயனோஸ்பியரில் ஏற்படும் இடையூறு, பாதிப்புகளை ஆய்வு செய்வததை நோக்கமாக கொண்டுள்ளது.

ஒலி உந்துகணைகள்
இந்த மூன்று ஒலி உந்துகணைகளும் வெவ்வேறு நேரங்களில் ஏவப்படவுள்ளன.

முழு சூரிய கிரகண நிலையை பொறுத்து, 45 நிமிடங்களுக்கு முன், கிரணத்தின் போது மற்றும் கிரணத்திற்குப் பின் என 3 நேரங்களில் ஏவப்படவுள்ளன.

இவ்வாறு இடைவெளி விட்டு ஏவப்படுவது சூரியனின் திடீர் மறைவு அயனோஸ்பியரை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான தரவுகளை சேகரிக்க உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அயனோஸ்பியர் பாதிப்பு
அத்துடன், அயனோஸ்பியர் பாதிப்பு தொலைத் தொடர்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர் பர்ஜாத்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “அயனோஸ்பியர் என்பது பூமியின் வளிமண்டலத்தின் ஒரு பகுதியாகும்.

இது தரையில் இருந்து 55 முதல் 310 மைல்கள் வரை உள்ளது. இது ஒரு மின்மயமாக்கப்பட்ட பகுதி இது ரேடியோ சிக்னல்களை பிரதிபலிக்கிறது.

மேலும், சமிக்ஞைகள் கடந்து செல்லும் போது செயற்கைக் கோள் தகவல் தொடர்புகளையும் பாதிக்கிறது” என கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.