மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு பின் 143 பேர் மாயம்! ரஷ்ய அதிகாரிகள் அதிர்ச்சி அறிக்கை
ரஷ்யாவில் கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின் 140க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன.
பயங்கரவாத தாக்குதல்
மாஸ்கோ நகரில் கச்சேரி அரங்கில் கடந்த வாரம் கொடிய பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இறப்பு எண்ணிக்கை 140 ஆகவும், 360 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ரஷ்ய புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் 143 பேர் காணாமல் போனதாக தெரிய வந்துள்ளது.
விசாரணைக் குழு
இதுகுறித்த அறிக்கைகளை குறித்த அதிகாரிகள் பெற்றுள்ளனர். இவை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் இருந்து கிடைத்துள்ளது.
மேலும், 9 முதல் 16 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளின் உடல்கள் உட்பட 84 உடல்களை அதிகாரிகள் இதுவரை அடையாளம் கண்டுள்ளனர் என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் மீதமுள்ள பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் மரபணு சோதனைகள் மூலம் நிறுவப்பட்டு வருவதாகவும் அந்த குழு கூறியுள்ளது.