யாழ். நெல்லியடியில் கசிப்பு குகை முற்றுகை!
யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கசிப்பு குகையொன்று நேற்று(27) முற்றுகையிடப்பட்டது.
காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த சுற்றிவளைப்பு
நடத்தப்பட்டது.
600 லீற்றருக்கும் மேற்பட்ட கோடாவும் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்களும் இதன்போது பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.