;
Athirady Tamil News

வெளிமாவட்டத்தில் இருந்து கொழும்பு செல்வோரிற்கு எச்சரிக்கை; யாழ் நபருக்கு நடந்த திகில் சம்பவம்!

0

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு சிகிச்சைக்காக சென்ற நபர் ஒருவர் கடத்தப்பட்டு அவரிடமிருந்து நகை மற்றும் அவர் அணித்திருந்த தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தவாரம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ் நபருக்கு திகில் சம்பவம்
குறித்த நபர் மருத்துவ சிகிறை பெறுவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு மனைவியுடன் புறப்பட்டு கொழும்புக்கு சென்றுள்ளார். மனைவியை பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் பிற்பகல் கொழும்பு கோட்டை பகுதிக்கு தனிப்பட்ட விடயமாக சென்றுள்ளார்.

அங்கு தனது அலுவல்களை முடித்துவிட்டு மாலைநேரம், கோட்டை போஹாவச் சந்தியில் ஓட்டோவில் சென்ற நபர் ஒருவர் , எங்கு போகப் போகிறீர்கள் என கொச்சைத் தமிழில் கேட்க , அவரும் பம்பலப்பிட்டிக்குச் என கூறி ஓட்டோவில் ஏறியுள்ளார்.

மருதானை வரும் வரையும் யாழ் நபருடன் சகஜமாக உயிரியாஅடிய முச்சக்கரவண்டி சாரதி, மருதானைச் சந்தியில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் நிறுத்திவிட்டுக் கடைக்கு சென்றவர் போத்துல் ஒன்றுடன் திரும்பியுள்ளார்.

அதற்கிடையில் மேலும் ஒருவர் அங்கு வந்து அந்த ஓட்டோக்காரருடன் மிக நட்பாக உரையாடிய நிலையில் , ஓட்டோக்குள் வைத்து மது போத்தலை உடைத்து கொஞ்சம் குடியுங்கள் பயணியிடம் கேட்டுள்ளார் சாரதி. இந்நிலையில் அதற்கு மறுத்த யாழ் நபர், தனது மனைவி வைத்தியசாலையில் உள்ளார் என தெரிவித்து, பம்பலப்பிட்டியில் இறக்கிவிடுங்கள் என கூறியுள்ளார்.

மோசம் செய்த முச்சக்கரவண்டி சாரதி
எனினும் அதனை காதில் வாங்காத முச்சக்கரவ்ண்டி சாரதி, யாழ் நபருக்கு பலவந்தமாக கழுத்தைப் பிடித்து மதுபானத்தை பருக்கியதுடன், முச்சக்கரவண்டியை பொரளைவரை சென்றபோது தான் மயங்கிவிட்டதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.

பின்னர் அம்பூலன்ஸில் தான் ஏற்றப்பட்டதைச் சற்று உணர்ந்ததாகவும் அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை பகல் வரை தான் எங்கு இருக்கிறேன் எனத் தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் தனது துயரத்தை மேலும் விபரித்தார்.

அதோடு முச்சக்கரவண்டியில் பயணித்தபோது , தனது கையில் இருந்த இரண்டு தங்க மோதிரங்கள், கை மணிக்கூடு, கைப் பையில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம், ஐம்பது ஸ்ரேலிங் பவுண்ஸ் மற்றும் கொள்வனவு செய்யப்பட்ட பெறுமதியான புதிய ஆடைகள் என்பவவும் கொள்ளியிடப்பட்டதாக பாதிக்கப்பட்ட யாழ் நபர் கூறியுள்ளார்.

அதேவேளை யாழ் நபரின் ஏரிஎம்மில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை மனைவி கூறிய பின்னரே அறிந்து கொண்டதாகவும், கடவுச் சொல்லை எப்படி பெற்றார்கள் என்று தனக்கு புரியவில்லை என்றும் அவர் விபரித்தார் மோசடியான கொழும்பு முச்சக்கரவண்டி சாரதியால் மொத்தமாக சுமார் ஏழு இலட்சம் ரூபாவரை இழந்துள்ளதாகவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு செல்வோர், மிகுந்த அவதானத்துடன் இருந்தால் மட்டுமே இவ்வாறான ஏமாற்றுக்காரர்களிடம் சிக்காமல் இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்,

You might also like

Leave A Reply

Your email address will not be published.