நிலைகுலையும் உக்ரைன்: சரமாரித் தாக்குதல் நடத்திய ரஷ்யா
உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்பின் மீது ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
அதன்போது, நாட்டின் மின்சார உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மின் உள்கட்டமைப்புப் பகுதிகளில் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீசி சரமாரியாக ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு 99 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாண்டில் மின் கட்டமைப்புகளின் மீது ரஷ்யா நடத்திய 2 ஆவது மிகப்பெரிய தாக்குதல் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மின் இணைப்பு
அதேவேளை, உக்ரைனின் நீப்ரோ நதியின் குறுக்கே ஸபோரிஷியா மாகாணத்தில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய நீா்த் தேக்க மின் உற்பத்தி நிலையத்தின் மீது ஏற்கனவே ரஷ்யா கடந்த 22 ஆம் திகதி நடத்திய தாக்குதல் நடத்தியிருந்தது.
அந்த தாக்குதலினால் சுமாா் 7 லட்சம் போ் வசிக்கும் காா்கிவ் நகரில் மின் இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.