ஒலியைவிட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் இந்தியாவின் ஏவுகணை : வெற்றிகரமாக நிகழ்ந்தது சோதனை
வெற்றிகரமான சோதனைக்கு பின் இந்திய ராணுவத்தில் ‘ரைசிங் சன்’ பிரமோஸ் ஏவுகணை இணைக்கப்பட்டுள்ளது, இந்திய ராணுவத்தின் அடையாளமாக பார்க்கப்படும் இந்த ஏவுகணை ஏராளமான சிறப்பம்சங்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இன்று (30) ‘ரைசிங் சன்’ பிரமோஸ் ஏவுகணை அந்தமான் நிக்கோபர் தீவு பகுதியில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் இதன் மூலம் இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ‘ரைசிங் சன்’ பிரமோஸ் ஏவுகணையானது நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை
ஆரம்பத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து இந்த ஏவுகணையை வடிவமைத்த நிலையில், தற்போது இந்தியா தனித்தன்மையுடன் இதனை உற்பத்தி செய்து வருகிறது.
அதிலும் குறிப்பாக மணிக்கு 3000 கி.மீ வேகத்தில் சீறி பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளுக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
நீண்ட தூர இலக்கு
இந்தோ – பசிபிக் பகுதியில் அமைதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இது நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் இது பயணிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.