பிரித்தானிய வீரர்கள் மீசை மற்றும் தாடி வளர்க்க அனுமதி
பிரித்தானியாவின் இராணுவ வீரர்கள் மீசை மற்றும் தாடி வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விவாதத்தின் விளைவாக, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பிரித்தானிய இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் மீசை மற்றும் தாடியினை வளர்ப்பதற்கு எவ்வித தடைகளும் விதிக்கப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த புதிய கொள்கையானது பிரித்தானிய இராணுவத்தில் புதிய ஆட்களை இணைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.