புலம்பெயர்தல் பின்னணி குறித்து வெளிப்படையாக பேசிய பிரித்தானிய பிரதமர்
என்ன காரணமோ தெரியவில்லை, திடீரென பிரித்தானிய பிரதமர் ரிஷிக்கு தான் இந்திய வம்சாவளியினர் என்னும் ஞாபகம் வந்திருக்கிறது.
சமீபத்தில் பிரபல பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி, தனது புலம்பெயர்தல் பின்னணி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும், பிறகு அங்கிருந்து பிரித்தானியாவுக்கும் புலம்பெயர்ந்த தனது தாத்தா பாட்டி குறித்து தான் கூடுதலாக அறிந்துகொள்ள விரும்புவதாக தெரிவித்தார் ரிஷி.
எனது தாத்தாவும் பாட்டியும் இந்தியாவிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவுக்குச் சென்றார்கள். பிறகு, அவர்களும், என் பெற்றோருமாக பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தார்கள் என்று கூறிய ரிஷி, எனது பாட்டியைப் பொருத்தவரை, அதுதான் அவரது முதல் விமானப் பயணமாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன் என்கிறார். அப்போது, தன் குடும்பத்தினரை தான் எப்போது மீண்டும் சந்திப்பேன் என்பது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்காது என்கிறார் அவர்.
பிரித்தானியாவிலுள்ள Southamptonஇல் பிறந்த ரிஷி, தன் பாட்டி பிரித்தானியாவுக்கு வந்தபோது பிரித்தானிய வாழ்க்கை எப்படி சாத்தியமாகும் என அவருக்குத் தெரிந்திருக்காது என்று கூறுகிறார். ஆனால், சில தலைமுறைகளுக்குப் பிறகு, தான் பிரதமர் வீட்டில், முன்னாள் பிரதமர் மார்கரட் தாட்சரின் இருக்கையில் அமர்ந்திருப்பதாக தெரிவிக்கிறார் ரிஷி.