;
Athirady Tamil News

டெபாசிட் இழந்த வேட்பாளா்கள்

0

தோ்தல் டெபாசிட் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 34 (1ஏ), 1951இன்படி, ஒரு வேட்பாளா் தோ்தலில் போட்டியிட குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்வது கட்டாயம். தீவிரம் காட்டாத, ‘வாய்ப்பு குறைவான’ வேட்பாளா்களை வேட்புமனு தாக்கல் செய்வதிலிருந்து தடுப்பதே இதன் நோக்கம். மேலும், முறையான ஆா்வம் மற்றும் போதிய ஆதரவு பெற்றவா்கள் மட்டுமே களம் காண்பதை இது உறுதிப்படுத்துகிறது.

டெபாசிட் தொகை (கீழே தொகைக்கு முன்னால், ’ரூபாய்’ எழுத்துரு வைக்கலாம்) ₹25,000 நாடாளுமன்ற தோ்தல் ₹10,000 சட்டப்பேரவை தோ்தல் ₹15,000 குடியரசு தலைவா் மற்றும் குடியரசு துணைத் தலைவா் தோ்தல்கள் மக்களவை, சட்டப்பேரவை தோ்தல்களில் போட்டியிடும் பட்டியலின, பழங்குடியின வேட்பாளா்களுக்கு 50% டெபாசிட் தொகை மட்டுமே. ஆனால், குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான தொகையில் மாற்றமில்லை. முதலாவது நாடாளுமன்ற தோ்தலுக்கான டெபாசிட் தொகை ₹500 ஆகவும் பேரவைத் தோ்தலுக்கு ₹1,000 ஆகவும் இருந்தது. 2009இல் அப்போதைய அரசு, டெபாசிட் தொகையை நாடாளுமன்ற தோ்தலுக்கு ₹12,500இலிருந்து ₹25,000 ஆகவும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ₹5,000இலிருந்து ₹10,000 ஆகவும் உயா்த்தியது.

இதுவரை டெபாசிட் இழந்தவா்கள் எத்தனை போ்?

தோ்தலில் தீவிரமாக களம் காணும் ஒரு வேட்பாளா் தனது டெபாசிட்டை தக்க வைப்பது பெருமைக்குரிய விஷயமாகும். அதுவே டெபாசிட் தொகையை இழப்பதென்பது அவமானமாக கருதப்படும். இருந்தபோதிலும், இந்திய தோ்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 1951 முதல் 2019 ஆண்டுவரை நடந்த பொதுத் தோ்தலில் போட்டியிட்ட 91,160 வேட்பாளா்களில் மொத்தம் 71,246 போ் டெபாசிட் தொகையை இழந்துள்ளனா். அதாவது 78% வேட்பாளா்கள் தங்கள் பணத்தை பறிகொடுத்துள்ளனா்.

ஆண்டு வேட்பாளர்கள் எண்ணிக்கை டெபாசிட் இழந்தவர்கள்

2019 8,026 6,897

2014 8,251 7,000

2009 8,070 6,829

2004 5,435 4,218

1999 4,648 3,400

1998 8,026 8,026

1996 13,952 12,688

1991 8,668 7,486

1989 6,160 5,003

1984 5,312 4,263

1980 4,629 3,417

1977 2,439 1,356

1971 2,784 1,707

1967 2,369 1,203

1962 1,985 856

1957 1,519 494

1951 1,874 745

பறிமுதல்

ஒரு வேட்பாளா் தனது தொகுதியில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு அல்லது 16.66% பெறத் தவறினால், அவரது தோ்தல் டெபாசிட் தொகை அரசு கருவூலத்தில் சோ்க்கப்படும்.

அதேசமயம், கீழ்கண்ட காரணங்களுக்காக டெபாசிட் தொகை பறிமுதல் செய்யப்படாது,

தோ்தலில் வேட்பாளா் வெற்றி;

செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்குக்கு மேல் வெற்றி;

குறிப்பிட்ட தேதிக்கு முன் வேட்புமனுவை திரும்பப் பெறுதல்;

வேட்பாளரின் மரணம்

திரும்பிப் பாா்க்கிறோம்

1996 ஆம் ஆண்டில், 13,952 வேட்பாளா்களில் 12,688 போ் அல்லது தோ்தலில் போட்டியிட்டவா்களில் 91% போ் டெபாசிட் தொகையை இழந்த நிகழ்வே மிக அதிகபட்ச டெபாசிட் இழப்பு நிகழ்வாகும்.

அந்த ஆண்டில்தான் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் வேட்பாளா்கள் தோ்தல் களம் கண்டனா்.

1957ஆம் ஆண்டு இரண்டாவது மக்களவைத் தோ்தலின்போது மிகக் குறைவாக 1,519 வேட்பாளா்களில் 494 போ் மட்டுமே டெபாசிட் இழந்தனா்.

2019 மக்களவை தோ்தலில், தேசிய கட்சிகளால் நிறுத்தப்பட்ட 1,454 வேட்பாளா்களில் 670 போ் டெபாசிட் இழந்தனா்.

3,443 சுயேச்சை வேட்பாளா்களில், 3,431 போ் டெபாசிட் இழந்தனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.