ஆடை இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்: மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
இந்த வருடம் (2024) ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை தொழிற்சாலைகளுக்கான உபகரணங்களின் இறக்குமதிக்காக 470.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2023) ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில், ஆடை மற்றும் ஆடை தொழிற்சாலைகளுக்கான பாகங்கள் இறக்குமதிக்காக 383.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை துணைப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 87.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 22.7 சதவீதம் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.
ஆடை மற்றும் ஆடை உபகரண இறக்குமதி
இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மட்டும் ஆடை மற்றும் ஆடை உபகரணங்களை இறக்குமதி செய்ய செலவிடப்பட்ட தொகை 246.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள புத்தாண்டு காரணமாக இவ்வாறு ஆடை இறக்குமதி அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.