பிரித்தானிய பிரதமரின் கட்சிக்கு பெரும் பின்னடைவு
பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ரிசி சுனக்கின்(rishi sunak) கன்சர்வேட்டிவ் கட்சி(Conservative Party) பெரும் தோல்வியைச் சந்திக்கும் என கருத்து கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
தேர்தலில் யாருக்கு என்பது தொடர்பில் சிவில் சமூக பிரச்சார அமைப்பான ‘பெஸ்ட் ஃபார் பிரிட்டன்’ மெகா கருத்துக் கணிப்பொன்றை நடத்தியதன் மூலமாகவே இது தெரியவந்துள்ளது.
பெரும் பின்னடைவு
அதன்படி, தேர்தல் நடத்தப்பட்டால், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி நாடு முழுவதும் 250 எம்.பி.க்களை இழக்கும் என்றும், தொழிலாளர் கட்சி 468 இடங்களை பெற்று வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது.
அத்தோடு, பொதுத்தேர்தலில் பிரதமரின் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுமெனவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
வெற்றி பெறுவது கேள்விக்குறி
இந்நிலையில், கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சியைவிட 19 புள்ளிகள் முன்னிலையுடன், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 45 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கன்சர்வேட்டிவ் கட்சியில் பிரதமர் ரிஷி சுனக்கின் ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் அவர் வெற்றி பெறுவது கேள்விக்குறியாக உள்ளதாகவும் தொழிலாளர் கட்சி அவரை விடவும் 2.4 சதவீதம் மட்டுமே பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.